‘தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?’ – மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
விழுப்புரத்தில் நேற்று (03-01-2024) நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் “போராட்டம் என்றால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
முதலமைச்சர் அவர்களே தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனப்படுத்தி விட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.
“நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டுதான், அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும்”, என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.