• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

Byadmin

Sep 20, 2025


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக இன்றைய தினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள் அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

By admin