0
அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார்கள்.
1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 வது ஆண்டு நினைவேந்தல் திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் புதன்கிழமை (6) மாலை இடம்பெற்றபோது அங்கு இவ்வாறு குறிப்பிட்டனர்.
மேலும் அங்கு தெரிவித்த அவர்கள்,
செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது அதுவும் தோண்டப்படவேண்டும். அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும் தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.
சைவ ஆலயங்கள் இந்த கிராமத்தின் தன்மைக்கு ஆதாரமாய் இருக்கும் சான்றுகளாகும் இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதேபோன்று அம்பாறையில் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்ப்பட்டது.
இராணுவத்தினரின் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் உதவியுடன் திராய்கேணி கிராமத்தில் நுழைந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படையினர். முஸ்லீம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்கள் போன்ற இனவழிப்பாளர்கள் அங்குள்ள மக்களை கோயில்களில் ஒன்று சேரும்படி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு மக்கள் கூட அங்கிருந்த பெண்கள் குழந்தைகள்இ முதியவர்கள்இ ஆண்கள் 6765154 தமிழர்களை வெட்டியும் சுட்டும் வெறித்தனமாகக் காவு கொண்டனர்.
முதியவர்களை தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவங்களும் இன்றும் அங்கு நேரடியாக பார்த்த உறவுகளினுடைய கண்களில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
சுமார் தீக்கிரையாக்கப்பட்டதுடன் அன்றைய நாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த வெறியாட்டமானது பிற்பகல் வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள செயலகத்திற்குட்பட்ட திராய்க்கேணி எனும் 350க்கு மேலான வீடுகள் அழிக்கப்பட்டன.
35 இந்த திட்டமிடப்பட்ட கொலையிலே சுமார் 40 பெண்கள் விதவை ஆக்கப்பட்டிருந்தார்கள் பலர் அங்கவீனப்பட்டிருந்தார்கள் இவ்வாறாக ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த உயிரிழந்த ஆன்மாக்களுக்கான பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செய்து நீதியினை எதிர்பார்த்து வலியோடு திராய்க்கேணி கிராம மக்கள் காத்திருக்கின்றார்கள் என்றனர்.
மற்றுமொருவர் உரையாற்றும் போது
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் காரைதீவிலே அகதி முகாம்களில் தங்கி யிருந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தங்களுடைய மண்ணுக்கு திரும்பியிருந்தனர் அதனை தொடர்ந்து அக்கிராமத்தினுடைய அபிவிருத்தி சங்கத் தலைவர் மயிலிப்போடி அவர்கள் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது காரணம் அவர் 1990 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமத்திலே இடம்பெற்ற படுகொலைக்கான நீதியினைக்கோரியிருந்ததோடு அங்கு தொடர்ந்து இடம்பெற்ற காணி அபுகரிப்புக்களையும் தடுத்து வந்ததாலும் நீதி மன்றத்தை நாடியதாலும் அவர் அந்த கொலைகளை செய்த கும்பலினரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையில் 1956 இ1985 இ1990இ2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள்.ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோஇ நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை.எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயங்களில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. ராணுவமும் முஸ்லீம் காடையர்கள் என கூறப்பட்டோரும் இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தனர்.ஆனால் சில முஸ்லீம் மக்கள் அப்படுகொலை இடம்பெறும் போது எம்மை காப்பாற்றினர்.அதை நாம் நன்றியுடன் நினைவு படுத்துகின்றோம்.வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம்இ மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் காடையர்களும் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இட இல்லை. அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 35 வருடங்களாகின்றன.
1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செய்யப்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் கூறுகின்றனர்.
இதுபோல் வீரமுனை,உடும்பன் குளம்,நாவிதன்வெளி, காரைதீவு ,பாண்டிருப்பு போன்ற பல இடங்களிலும் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றன.இன்னும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
படுகொலை செய்யப்பட்ட 54 பேருக்காக ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி அக வணக்கம் செலுத்தப்பட்டது.
படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில் நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாய்மார்கள் மற்றும் கிராம தலைவர் உட்பட திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆகியோர் துயர் பகிர்ந்துகொண்டனர்.