• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

திரில்லராக உருவாகும் ‘ரேஜ்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Byadmin

Dec 20, 2025


நடிகர் ஷான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ரேஜ்’ எனும் திரைப்படம்- ரிவென்ஜ் திரில்லராக தயாராகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரேஜ்’ எனும் திரைப்படத்தில் ஷான், ஷெர்லி பபித்ரா, பவன் ஜினோ தோமஸ் , ஆரியன்,  பிரதோஷ்,  விக்ரம் ஆனந்த் , சரவணன், முனீஸ்காந்த் , ராமச்சந்திரன், மணிகண்டன் , அஜித் கோஷி, காயத்ரி ரமா, கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். எஸ். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். விபின் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அனாமிகா ரவீந்திரநாத் – அபிஷேக் ரவீந்திரநாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சென்னை போன்ற மாநகரத்தில் வாடகை மகிழுந்து வாகனம் ஒன்றில் சாரதியாக பணியாற்றும் கதாநாயகனின் வாழ்வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெறுகிறது.

அது அவனது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதன் பிறகு அவர் சந்திக்கும் சம்பவங்களும், சவால்களும் தான் படத்தின் திரைக்கதை” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், விரைவில் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin