• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவன் நிட்டம்புவையில் மீட்பு..!

Byadmin

Jan 27, 2026


திருகோணமலையில் நேற்று முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி ஓடி நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான இம்மாணவன், திங்கட்கிழமை  (26)  காலை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்.

சமுத்திரகம பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்த மாணவன், அடி காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.

நிட்டம்புவ பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக விரைந்துள்ளனர்.

மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By admin