• Thu. Jan 15th, 2026

24×7 Live News

Apdin News

திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்!

Byadmin

Jan 14, 2026


திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து இந்த மரத்தாலான அமைப்பினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin