• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | 4 IPS officers including Trichy DIG Varunkumar transferred

Byadmin

Aug 12, 2025


சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ, சென்னை மாநில குற்றப்பதிவு பணியகத்தின் ஐஜி-யாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



By admin