• Sat. Oct 5th, 2024

24×7 Live News

Apdin News

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா – டெண்டர் கோரியது தமிழக அரசு | Tidal Park in Trichy Panjapur at Rs 315 crore Tamil Nadu government has called for tender

Byadmin

Oct 4, 2024


சென்னை: திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை தரமணியைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், சென்னை பட்டாபிராம், மதுரையை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளியில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக திருச்சிராப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.

14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம், 6 தளங்களுடன் அமையும் இந்த பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு தற்போது ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த பூங்காப்பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



By admin