• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

திருச்சி: விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது – வானில் சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்?

Byadmin

Oct 11, 2024


திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, திருச்சியில் வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது. நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்திற்கு என்ன நேரிட்டது? விமானம் வானத்திலேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்தது ஏன்?

திருச்சி - ஷார்ஜா விமானம், தொழில்நுட்பக் கோளாறு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தல் 140-க்கும் அதிகமானோர் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் மேலே புறப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.

By admin