• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பதி கூட்ட நெரிசல்: 48 பேர் காயம், 6 பேர் மரணம் – பாதிக்கப்பட்டவர் கூறுவது என்ன?

Byadmin

Jan 9, 2025


திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்

வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட்டுகளை வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 நபர்கள் உயிரிழந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் உடனடியாக அங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வியாழக்கிழமை அன்று தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி கோவிலில் உள்ள 8 இடங்களில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையன்று அதிகளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

திருப்பதியில் உள்ள ராமநாயுடு பள்ளி மற்றும் பைராகிபெட்டெடாவில் அமைந்துள்ள விஷ்ணு நிவாசம் கேந்திராஸ் ஆகிய இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்.

By admin