• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு என்ன? முழு விவரம்

Byadmin

Jan 7, 2026


திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதனால் தனி நீதிபதியின் உத்தரவை முன்னரே முடிக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஓராண்டில் குறிப்பிட்ட நாளில் கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசு அஞ்சுவது ஆபத்தானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இது நம்புவதற்குக் கடினமானது என்று கூறியுள்ள நீதிபதிகள், ‘சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்’ எனவும் தெரிவித்துள்ளனர்.

By admin