• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தூண் பற்றிய தரவுகள் இல்லையா? தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் முன்வைத்த 3 வாதங்கள்

Byadmin

Dec 18, 2025


திருப்பரங்குன்றம்: தூண் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முன்வைத்த 3 வாதங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

“அந்தக் கல் தூண் எப்போது வைக்கப்பட்டது என்பதற்கு எந்தத் தரவும் கிடைக்கவில்லை. அது தீபத் தூண் என்பது யூகம்தான். இதுவரை அங்கு எந்தத் தீபமும் ஏற்றப்படவில்லை” – டிசம்பர் 18ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் இவ்வாறு வாதிட்டார்.

“முழுமையான விசாரணை நடக்கும்போது கல் தூண் குறித்த விவரங்கள் தெரிய வரலாம்” எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 7 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக, நீதிபதிகள் கூறினர்.

முன்னதாக, “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

By admin