• Fri. Jan 24th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சர்ச்சை: பாஜக குற்றச்சாட்டுக்கு நவாஸ்கனி எம்.பி சொல்வது என்ன?

Byadmin

Jan 23, 2025


திருப்பரங்குன்றம் மலை

பட மூலாதாரம், @KNavaskani

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நேரில் சென்று களஆய்வு செய்ததாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இறங்கியுள்ளதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை மறுத்துப் பேசும் நவாஸ்கனி, “மலையில் உள்ள தர்காவில் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது” எனக் கூறுகிறார்.

திருப்பரங்குன்றம் மலையை வைத்து சர்ச்சை கிளம்புவது ஏன்?



By admin