• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலையில் கோவிலுக்குச் சொந்தமான மரத்தில் பிறை கொடியா? புதிய சர்ச்சை

Byadmin

Jan 22, 2026


திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவில், மதுரை, சிக்கந்தர் தர்கா
படக்குறிப்பு, கல் தூணின் அருகே உள்ள கல்லத்தி மரம். (கொடியுடன், கொடி அகற்றப்பட்ட பின்)

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

‘கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து சந்தனக் கூடு திருவிழாவை வெளிப்படுத்தும்விதமாக கல்லத்தி மரக் கிளையில் சிலர் கொடியைக் கட்டியுள்ளனர். இது சட்டவிரோதமானது’

திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று சுப்ரமணிய சுவாமி கோவிலின் கண்காணிப்பாளர் அளித்துள்ள புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அதே நாளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘கல்லத்தி மரத்தில் உள்ள கொடி’ தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ‘தர்கா நிர்வாகத்துக்கு எந்தத் தகவலையும் கூறாமல் ஜனவரி 15ஆம் தேதி பிறை கொடியை அகற்றிவிட்டதாக’ அதன் நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டிருந்த கொடியை மட்டுமே கோவில் நிர்வாகம் அகற்றியுள்ளதாக இந்து அமைப்பினர் கூறுகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மரத்தில் கொடியைக் கட்டியதால் என்ன பிரச்னை? இரு தரப்பும் சொல்லும் விளக்கம் என்ன?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் அமைந்துள்ளது.

By admin