• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்கை ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை – பின்னணி என்ன?

Byadmin

Apr 10, 2026


திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

”திருப்பரங்குன்றம் மக்களின் விருப்பத்தை காலம் காலமாக திமுக பாதுகாத்து வருகிறது, அந்த வகையில் இந்த இடைக்கால உத்தரவு வரவேற்க கூடியது” என்றார் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன்.

ஆனால், ”இந்த இடைக்கால உத்தரவு தற்காலிகமானதுதான். அதில் திமுக கொண்டாட எதுவுமில்லை” என்கிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்

திருப்பரங்குன்றம்

தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

By admin