• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

திருமலையில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Byadmin

May 17, 2025


திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த எட்வேட் கோமர் (வயது 70) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் அணிந்திருந்த சேட் மற்றும் சாரம் ஆகியவற்றை வைத்து இது தனது தந்தை என மகள் அடையாளம் காட்டியுள்ளார் எனவும், அந்த நபர் காணாமல்போயுள்ளார் என்று அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin