• Sat. Aug 9th, 2025

24×7 Live News

Apdin News

திருமலையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Byadmin

Aug 8, 2025


உருக்குலைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை பகல் திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பொலிஸ் பிரிவின் திரியாயில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளைக் குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திரியாயை அண்மித்த கல்லறாவ கடற்கரைப் பகுதியில் வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபடும் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்று இது வரை வாடிக்கு திரும்பவில்லை. அவர் வைத்தியசாலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால், எந்த வைத்தியசாலையிலும் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். எனினும், காணமல்போனவர்தான் இங்கு சடலமாகக் காணப்படுகின்றாரா என இதுவரை தகவல் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

By admin