• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

திருமாவளவன்: விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல’

Byadmin

Dec 25, 2024


தொல். திருமாவளவன்
படக்குறிப்பு, ”தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.”

சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன.

ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை அமைதியாகவே எதிர்கொண்டார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் திருமாவளவன் விரிவாகப்  பேசினார்.

By admin