0
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘சட்டமும் நீதியும் ‘என்ற இணைய தொடர் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ பொலிஸ் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நடிகர்கள் சசிகுமார் – வெற்றி- காளி வெங்கட் – சரவணன்- இயக்குநர் பாண்டிராஜ் – ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாலு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொலிஸ் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் ‘ பருத்தி வீரன் ‘ சரவணன், ‘காதல்’ சுகுமார், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயா கே. தாஸ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஒன் த டேபிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரிக்கிறார். படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.