• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

திரௌபதி 2 ஊடக விமர்சனம்: மோகன் ஜி எடுத்திருக்கும் வரலாற்றுக்கதை எப்படி இருக்கிறது?

Byadmin

Jan 24, 2026


திரௌபதி 2, மோகன் ஜி, ரிச்சர்ட் ரிஷி

பட மூலாதாரம், mohan_dir/Instagram

2020ம் ஆண்டு வெளியான திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளிக்கிழமை வெளியானது. மோகன் ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசூடன், நடராஜன் (நட்டி), சிராக் ஜானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவின் வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது.

திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும் வீர வல்லாள மகாராஜாவான நட்ராஜின் (நட்டி) கருட படையில் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். இதற்கிடையில், வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதை எதிர்த்து போரிடும் நட்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் ரிச்சர்ட் ரிஷி முன்பு நட்ராஜின் ஆன்மா தோன்றி சில பொறுப்புகளை அளித்து மாயமாகி விடுகிறது.

அந்த பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் ரிச்சர்ட் ரிஷி ஈடுபட அவரது மனைவி திரௌபதியான ரக்ஷனா சிலரது சதி வேலையில் சிக்கி கணவரை பிரிகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

‘நடிகர்களுக்கு பாராட்டு’

இந்த படத்திற்கு பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

By admin