• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

திவ்யா தேஷ்முக்: சர்வதேச செஸ்ஸில் இளம் வயதிலேயே கலக்கும் இந்திய வீராங்கனை

Byadmin

Feb 3, 2026


காணொளிக் குறிப்பு, செஸ் துறையில் கலக்கும் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்

காணொளி: சதுங்கத்தில் இளம் வயதிலேயே கலக்கும் இந்திய வீராங்கனை

2025-ல், ஃபிடே மகளிர் உலகக் கோப்பை பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றவர். இந்த சாதனை படைத்த நான்காவது இந்தியப் பெண் மற்றும் உலகின் 44வது பெண்.

மகாராஷ்டிராவில் பிறந்த இவர், 5 வயதில் செஸ் விளையாட தொடங்கினார். 2 ஆண்டுகளுக்குள் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை 2012-இல் வென்றார்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த 10 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றார்.

2017-இல், பிரேசிலில் நடந்த 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றார்.

2023-ல், ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, ஆசியாவின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக இடம்பிடித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin