• Sat. Aug 9th, 2025

24×7 Live News

Apdin News

திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Byadmin

Aug 9, 2025


யாழ். வலிகாமம் வடக்கு, தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin