• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

தி கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு இடைக்கால தடை ஏன்? – நீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Feb 27, 2026


தி கேரளா ஸ்டோரி 2, கேரளம், அரசியல், இந்தியா

பட மூலாதாரம், Sunshine Pictures

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.

இஸ்லாமிய மதமாற்றத்தை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி 2’ (The Kerala Story-2 Goes Beyond) படம், பிப்ரவரி 27 அன்று வெளியாகவிருந்த நிலையில், இந்த படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லரில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், அந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்தும், படத்தின் தலைப்பை மாற்றக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த படம் கேரள மக்களிடம் விஷத்தைப் பரப்பும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ஆனால் படத்தைப் பற்றி தவறாக முன் முடிவு எடுத்திருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்துடனும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் படத்தயாரிப்பாளர் விபுல் ஷா தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கலான பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று முதல் பாகத்தின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin