• Mon. Nov 24th, 2025

24×7 Live News

Apdin News

தி டெலிகிராஃப்யை அதன் போட்டிப் பத்திரிகை டெய்லி மெயில் வாங்குகிறது!

Byadmin

Nov 24, 2025


இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பத்திரிகையான தி டெலிகிராஃப்யை (The Telegraph) அதன் போட்டிப் பத்திரிகையான டெய்லி மெயில் (Daily Mail) விலை 650 மில்லியன் டொலருக்கு வாங்குகிறது.

டெய்லி மெயில் பத்திரிகையின் உரிமையாளரான DMGT, டெலிகிராஃப் பத்திரிகையை வாங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது.

டெய்லி மெயில், தி டெலிகிராஃப் இரண்டுமே வலதுசாரி பத்திரிகைகள். எனவே, இந்த இரண்டும் இணைவது இங்கிலாந்தில் சக்திவாய்ந்த வலதுசாரி ஊடகத்தை உருவாக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இதற்குமுன் தி டெலிகிராஃப் பத்திரிகையை அமெரிக்காவின் RedBird Capital Partners நிறுவனம் வாங்குவதாக இருந்தது. எனினும், அது பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டது. வெளிநாட்டு நிறுவனம் வாங்குவதில் சிக்கல் என்று இங்கிலாந்து அரசாங்கம் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

By admin