• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்  | special buses for Diwali festival

Byadmin

Oct 7, 2025


சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்கு மக்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்ல வசதி​யாக 20,378 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு போக்​கு​வரத்​துத் துறை சார்​பில் மேற்​கொள்​ளப்​படும் சிறப்பு ஏற்​பாடு​கள் மற்​றும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கம் குறித்த ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சிவசங்​கர், துறை செய​லா​ளர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு, ஆணை​யர் கஜலக்​‌ஷ்மி, போக்​கு​வரத்து கழக மேலாண் இயக்​குநர்​கள், காவல்​துறை, சிஎம்​டிஏ, நெடுஞ்​சாலை உள்​ளிட்ட அரசுத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்​றனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் சிவசங்​கர் கூறிய​தாவது: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்​னையி​லிருந்து தினசரி இயக்​கக் கூடிய 2,092 பேருந்​துகளு​டன் 5,710 சிறப்பு பேருந்​துகள் என 4 நாட்​களுக்​கும் சேர்த்து மொத்​த​மாக 14,268 பேருந்​துகளும், பிற ஊர்​களி​லிருந்து மேற்​கண்ட நாட்​களுக்கு 6,110 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 20,378 பேருந்​துகள் இயக்​கப்​படும்.

பண்​டிகை முடிந்து பிற ஊர்​களி​லிருந்து சென்னை திரும்ப வசதி​யாக 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை, தினசரி இயக்​கக் கூடிய 2,092 பேருந்​துகளு​டன் 4,253 சிறப்பு பேருந்​துகளும், மற்ற பிற முக்​கிய ஊர்​களி​லிருந்து பல்​வேறு ஊர்​களுக்கு 4,600 பேருந்​துகள் என மொத்​தம் 15,129 பேருந்​துகளும் இயக்​கப்​படும். சென்​னை​யில் உள்ள 3 பேருந்து நிலை​யங்​களில் இருந்​தும் இந்த பேருந்​துகள் இயக்​கப்​படும். பயணி​கள் முன்​ப​திவு செய்ய வசதி​யாக கிளாம்​பாக்​கத்​தில் 10, கோயம்​பேட்​டில் 2 என மொத்​தம் 12 முன்​ப​திவு மையங்​கள் செயல்​படும். மேலும் டிஎன்​எஸ்​டிசி செயலி மற்​றும் www.tnstc.in இணையதளம் மூல​மாக​வும் முன்​ப​திவு செய்​து​கொள்​ளலாம்.

பேருந்​துகளின் இயக்​கம் மற்​றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேர​மும் தொடர்பு கொள்​ளலாம். மேலும், ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூல் உள்​ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்​றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். பொது​மக்​களின் வசதிக்​காக கோயம்​பேடு பேருந்து நிலை​யத்திலிருந்து மற்ற இரண்டு பேருந்து நிலை​யங்​களுக்​கும் செல்ல ஏது​வாக கூடுதலாக 150 மாநகர பேருந்​துகள் இயக்கப்படும்.



By admin