• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை | Koyambedu vegetable market will have a holiday tomorrow

Byadmin

Oct 31, 2024


சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை (நவ.1) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் 3 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

இந்த கடைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகின்றன.

விவசாயிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடட்டத்தில இருப்பதால், இன்று காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. மேலும் லாரி ஓட்டுநர்களும், கோயம்பேடு சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களும் தீபாவளி விடுமுறையில் சென்றுவிடுவார்கள். அதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை காய்கறிகள் வராது.

இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை விடுவது என முடிவெடுத்து இருப்பதாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.



By admin