தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து அக்.21, 22-ம் ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு சிறப்பு ரயில் (06155) புறப்பட்டு, அதேநாள் நள்ளிரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
போத்தனூரில் இருந்து அக்.19-ம் தேதி இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும். சென்ட்ரலில் இருந்து அக்.20-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு, போத்தனூர் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும்.
மங்களூரு சென்ட்ரலில் இருந்து அக்.21-ம் தேதி மாலை 4.35 மணிக்கு சிறப்பு ரயில் (06002) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். சென்ட்ரலில் இருந்து அக்.22-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, அதேநாள் இரவு 10 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
இதுதவிர, திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும்பூர் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.