காணொளி: சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பாரா தடகள வீரர்
22 வயதான தீப்தி ஜீவான்ஜி, ஓட்டப்பந்தயத்தில் தனது போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளுவது போலவே, மற்றவர்களிறன் ஏளன பேச்சுகளையும் பின்னுக்கு தள்ளினார்.
இவர் T20 400 மீட்டர் ஓட்ட போட்டிகளில் பங்கேற்கிறார். T20 போட்டி அறிவுசார் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.
தெலங்கானாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 2003-ல் பிறந்த தீப்தி, சிறுவயது முதலே seizures பாதிப்பால் அவதிப்பட்டார். சிகிச்சையில், அவர் அறிவுசார் குறைபாடு உடையவர் என்பது பெற்றோருக்கு தெரிய வந்தது. இருப்பினும், அவரது திறமைகளில் ஒன்று பள்ளியில் இருந்த உடற்பயிற்சி ஆசிரியரால் தொடக்கத்திலேயே கவனிக்கப்பட்டது. பின்னர், பயிற்சியாளர் நாக்பூரி ரமேஷ், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அவர் அங்கீகாரம் பெற உதவினார்.
தீப்தி ஜீவான்ஜியுடனான உரையாடலை பார்க்கலாம்….
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு