0
இங்கிலாந்தின் வேல்ஸ் (Wales) பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது காரிலிருந்து புகை வருவதை கவனித்தார் அலெக்ஸ் மெக்லீன். உடனடியாக அவர் காரிலிருந்து வெளியேறினார்.
ஆனால், காரின் உள்ளே இருந்த தனது 9 மாதக் குழந்தையை வெளியேற்ற முடியாமல் தவித்தார். காரின் எந்தக் கதவையும் திறக்க முடியாத நிலையில், கார் வேகமாக தீப்பற்றத் தொடங்கியது.
பதற்றத்தில் உதவி கேட்டு அலெக்ஸ் கத்தினார். காரின் ஜன்னலை உடைக்க முயன்றும் அது சாத்தியமாகவில்லை. அந்த நேரத்தில் அங்கு வந்த வழிப்போக்கர்கள் வெஸ்லி பேனன் (Wesley Beynon) மற்றும் அவரது உறவினர் மார்க் வில்டிங் (Marc Willding) உடனே உதவ முன்வந்தனர்.
அவர்கள் காரின் ஓட்டுநர் இருக்கை வழியாக உள்ளே சென்று, பின்புற இருக்கையில் சிக்கியிருந்த குழந்தையை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
குழந்தை மீட்கப்பட்ட சுமார் 30 விநாடிகளில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் சம்பவத்தில் தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இருவரையும் மறக்க முடியாது என அலெக்ஸ் மெக்லீன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.