• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது?

Byadmin

Aug 14, 2026


ரீல்களுக்கு முந்தைய மேடை - அண்ணா முதல் உதயநிதி வரை: தமிழக அரசியல் மேடையில் நடந்த மாற்றம்

பட மூலாதாரம், Getty/TN Assembly

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தஞ்சாவூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் பேச்சின் எல்லைகள் குறித்த பழைய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில், தமிழ் மக்கள் அரசியலை வெறுமனே கேட்கவில்லை; இரவு நேரங்களில் அது நிகழ்த்திக் காட்டப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் மக்கள் திரண்டனர்.

தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், யூடியூப் சேனல்கள், ரீல்ஸ் ஆகியவை அரசியலை சில விநாடிகளுக்கு உள்ளாகச் சுருக்குவதற்கு முன், “மேடைப் பேச்சு” என்ற தனிப்பட்ட அரசியல் வடிவம் இருந்தது. ஒரு மைக்கிரோஃபோன், தற்காலிக மேடை, வரிசையாக ஒளிரும் டியூப் லைட்டுகள், கூட்டத்தைத் தாண்டி குரலை எடுத்துச் செல்லும் ஒலிப்பெருக்கிகள், மேலும் மறுநாள் காலை குறித்த கவலை ஏதுமின்றி பல மணிநேரம் பேசும் பேச்சாளர்கள்.

சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக அரசியல் விவாதங்களுக்கு திராவிடர் கழகம் (திக) மேடையைப் பயன்படுத்தியது. அதிலிருந்து உருவான திமுக, அதே மேடையைத் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது.

“காங்கிரஸுக்கும் சிறந்த பேச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களது பேச்சு பழைய பாணியில் இருந்தது. 1950 மற்றும் 1960களின் இளம் திமுக வேறுபட்ட பாணியை அறிமுகப்படுத்தியது. இலக்கியத் தமிழ், நாடக அம்சம், நையாண்டி, கருத்தியல் வாதம், பொழுதுபோக்கு ஆகியவை ஒன்றிணைந்த அரசியல் நிகழ்வாக அது அமைந்தது” என்கிறார் விவேகானந்தா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஓய்வுபெற்ற தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன்.

By admin