• Thu. May 15th, 2025

24×7 Live News

Apdin News

தீவிரவாதிகள் திருந்தி விட்டார்களா? பிபிசி கேள்விக்கு பாகிஸ்தான் அமைச்சர் அளித்த பதில் – காணொளி

Byadmin

May 15, 2025


காணொளிக் குறிப்பு, ‘பாகிஸ்தானில் தீவிரவாதத் தலைவர்கள் யாரும் இல்லை’- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பிபிசியிடம் கூறியது என்ன?

தீவிரவாதிகள் திருந்தி விட்டார்களா?: பிபிசி கேள்விக்கு பாகிஸ்தான் அமைச்சர் அளித்த பதில் – காணொளி

கடந்த மே 8ஆம் தேதி, இந்தியா- பாகிஸ்தான் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது பிபிசி செய்தியாளர் ஆஸடே மொஷிரி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபை பேட்டி கண்டார்.

அப்போது, “பாகிஸ்தானில் எந்த தீவிரவாத தலைவர்களோ அல்லது எந்த தீவிரவாத அமைப்போ இல்லை என்கிறீர்களா?” என்று மொஷிரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கவாஜா ஆசிஃப், “இல்லை, ஒருவரும் இல்லை” என்றார்.

அந்த நேர்காணலில், “பஹாவல்பூரில் எந்த பயங்கரவாதக் குழுக்களும் இல்லை என்பதுதான் எங்கள் கூற்று” என்று வலியுறுத்திய கவாஜா ஆசிஃப், ஐநா-வால் ‘பயங்கரவாதியாக’ அறிவிக்கப்பட்ட மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று கூறினார்.

முழு விவரம் காணொளியில்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin