4
இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தீ விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது வீட்டில் இருந்த மேற்படி சிறுவன் தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.