1
துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் என்றாலும் துணிகளை சரியான முறையில் பிரித்து துவைக்க வேண்டியது அவசியம். துணி துவைக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது எல்லா துணிகளையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது.
வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்கள் துணிகளை, கைக்குட்டை மற்றும் உப துணிகளை தனியாக துவைக்க வேண்டும்.
வீட்டில் பயன்படுத்தும் படுக்கை துணி, உள்ளாடைகள், துண்டுகளை தனியாக ஊற வைத்து துவைப்பது நல்லது.
புதிதாக வாங்கிய துணிகள் சாயம் போகும் என்பதால் மற்ற துணிகளோடு சேர்த்து துவைத்தால் அந்த சாயம் மற்ற துணிகளில் ஒட்டிக் கொள்ளும்.
துணிகளை வாஷிங் பவுடர், லிக்விட் அல்லது சோப்பு எதை கொண்டு துவைத்தாலும் துவைக்கும் முன் நன்றாக ஊற வைப்பது முக்கியம்.
துவைத்த துணிகளை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாக்டீரியாக்கள் இருந்தாலும் வெயிலில் அழியும்.
துணிகளை காயப்போடும்போது முறுக்கி பிழிந்து விட்டு உதறிவிட்டு காயப்போட்டால் துணியில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கும்.