• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

துணையுடன் சண்டை வராமல் இருக்க இதை எல்லாம் தியாகம் செய்ய தயாராக இருங்கள்

Byadmin

Oct 3, 2024


ஒரு ஆரோக்கியமான உறவில் தியாகம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும். தியாகம் பெரிதாக நினைக்க வேண்டாம். எளிமையான விஷயங்கள் தான் அவை. உங்கள் துணையிடம் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கக் கூடாது, பதிலுக்கு எதையும் கொடுக்கவும் வேண்டும். இன்னொருவருக்காக நாம் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

1. நேரம்
இன்று நம் வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவது என்பது பெரிய விஷயமாக உள்ளது. உறவை வலுவாக வைத்திருக்க நேரத்தை துனைக்காக தியாகம் செய்ய வேண்டும் முக்கியம். அந்த சமயங்களில் பிறரை பற்றி பேசாமல் உங்கள் இருவரின் வாழ்க்கை, எதிர்கால திட்டங்கள் ஆகிவற்றை பேசுங்கள்.

2. பணம்
திருமண உறவுகள் இன்று பணத்தின் அடிப்படையிலேயே முடிவாகின்றன. பல இணையர்கள் இடையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக நிதி நிலைமையே உள்ளது. ஒருவர் மட்டுமே செலவு செய்பவராக இருந்தால் மோதல் ஏற்படும். புது மண தம்பதிகளைப் பொறுத்தவரை, வருமானத்தைப் பகிர்ந்துகொள்வது என்பது ஆரம்பத்தில் ஒரு புதிய, அழுத்தமான பயணமாக இருக்கும். நாளடைவில் அன்பு கூட கூட பணம் செலவிடுதல் பெரிதாக தெரியாது. பாக்கெட்டில் இருந்து ரூபாயை நோட்டுகளை விட்டுக்கொடுப்பது மட்டுமல்ல தியாகம், துணைக்காக நமது செலவிடுதலை மாற்றிக்கொள்வது கூட தியாகம் தான். இருவரும் சம்பாதிக்கும் குடும்பத்தில் செலவுகளை பகிர்வது முக்கியம்.

3. சுயநலம்
திருமணம் அல்லது காதல் உறவில் உங்களைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திக்கக் கூடாது. எல்லா நேரத்திலும் உங்கள் மீது கவனம் செலுத்துவது மிகவும் எளிது, ஏனென்றால் உங்களின் தேவைகள், எண்ணங்கள், ஆசைகள் எப்போதும் உங்கள் தலையில் இருக்கும்.

துணையைப் பற்றி சிந்திக்க தான் முயற்சி தேவை. அவர்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு மன உறுதி தேவை. இன்னும், நாம் மனத்தாழ்மையுடன் முயற்சி செய்யும்போது அவருடன் வாதத்தை ‘வெல்ல’ தேவையில்லை என்று முடிவு செய்வோம் அல்லது புண்படுத்தும் ஒன்றைக் கூறுவதற்குப் பதிலாக மெளனமாக இருப்போம். மற்றவரைப் பேசவும், கேட்கவும் அனுமதிப்போம் ஒரு வழிக்கு பதிலாக இருவழிப் பாதையாக உறவு மாறி வலுப்பெறும்.

4. ஆற்றல்
ஆமாம். உங்கள் உறவுடன் தரமான நேரத்தை செலவிட நீங்கள் ஆற்றலை செலவழிக்க வேண்டும். அதற்காக கிடைக்கும் நேரத்தில் செல்போனை நோண்டாமல் ஓய்வெடுங்கள். உறவுகளுக்கு ஆற்றலை அர்ப்பணிப்பது முக்கியம். அப்போது தான் தேவையான போது அவர்களுடன் இருக்க முடியும். எங்காவது அவுட்டிங் கூப்பிட்டால் ஆம் சொல்ல முடியும்.

இவற்றை எல்லாம் பின்பற்றினால் உறவுக்குள் பெரிதாக சண்டை சச்சரவு வராது.

By admin