• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

துணைவேந்தர்கள் நியமனம்: இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் – அடுத்து என்ன நடக்கும்?

Byadmin

Feb 5, 2026


துணைவேந்தர்கள், உச்ச நீதிமன்றம், பல்கலைக்கழகங்கள், ஆளுநர்

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook

படக்குறிப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி (கோப்புப் படம்)

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், ‘இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?’ எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கண்ட வழக்கைக் காரணம் காட்டி, ‘துணைவேந்தர் நியமனத்துக்கு மாநில அரசு தேடுதல் குழுவை அமைத்திருப்பதை சட்டத்துக்கு முரணானது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அடுத்து என்ன நடக்கும்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

‘வேந்தர்’ என்ற இடத்தில் ‘அரசு’ என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார்.

By admin