• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு | BJP Ayalakka Tamil wing help bring the body to tamilnadu of ramanathapuram youth who died in dubai

Byadmin

Oct 28, 2025


சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது.

இதையடுத்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர் மாரடைப்​பால் கடந்த 18-ம் தேதி உயி​ரிழந்​தார். இந்த தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டது. அதிர்ச்சி அடைந்த குடும்​பத்​தினர், அவரது உடலை துபாயிலிருந்து தமிழகம் கொண்​டுவர முயற்​சிகளை மேற்​கொண்​டனர்.

ஆனால், போதிய உதவி​கள் கிடைக்​காமல் அவர்கள் தவித்து வந்​தனர். இந்​நிலை​யில், இந்த தகவல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரத்​தின் கவனத்​துக்​குச் சென்​றது. இதையடுத்​து, அயலக தமிழர் பிரிவு மாநிலச் செய​லா​ள​ரான ராம​நாத​புரத்​தைச் சேர்ந்த எல்​.அன்​பழகன், மாவட்​டத் தலை​வர் என்​.கே.கோ​பால் மற்​றும் பாஜக நிர்​வாகி​களை ஒருங்​கிணைத்து, உயி​ரிழந்த இளைஞரின் உடலை தமிழகம் கொண்டு வரு​வதற்​கான முயற்​சிகளை கே.எம்​.சுந்​தரம் மேற்​கொண்​டார்.

இதுதொடர்​பாக, மத்​திய அரசு மூலம் துபா​யில் உள்ள தூதரக அதி​காரி​களிடம் பேசி, மாரி​முத்​து​வின் உடலை துபா​யில் இருந்து விமானம் மூலம் கடந்த 23-ம் தேதி திருச்சி கொண்டு வந்​தனர். பின்​னர், ஆம்​புலன்ஸ் மூலம், மாரி​முத்​துவின் சொந்த ஊருக்கு உடல் எடுத்து செல்​லப்​பட்டு அவரது குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இதற்​கான முழு செல​வை​யும் பாஜக அயலக தமிழர் பிரிவே ஏற்​றுக்​கொண்​டது. மேலும், இறுதி ஊர்​வலத்​தி​லும் பங்​கேற்​றதோடு, அந்த குடும்பத்தினருக்கு தேவை​யான உதவி​களையும் செய்து வருகின்​றனர்​.



By admin