• Tue. Mar 17th, 2026

24×7 Live News

Apdin News

துபையில் தொடர் தாக்குதல் – அங்கு வசிக்கும் வெளிநாட்டினரின் மனநிலை என்ன?

Byadmin

Mar 17, 2026


துபையின் இந்த விஷயத்துக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

துபையின் ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை கிளப்புகள் நிறைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பனை மர வடிவத் தீவான பாம் ஜுமேராவில் உள்ள ஒரு பாரில், ஸ்டெஃபனி பேக்கர் நண்பர்களுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

ஆனால், அந்த குழுவினர் அருகிலுள்ள மற்றொரு இடத்திற்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, வழக்கத்திற்கு மாறான ஒன்று இரவு வானில் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.

சற்று நேரத்திலேயே, ஒரு டிரோனின் சிதறிய பாகங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஃபேர்மாண்ட் மீது மோதின. பேக்கரும் அவரது நண்பர்களும் அந்தத் தெருவிற்கு நேர் எதிரேதான் நின்று கொண்டிருந்தனர்.

துபையின் பிம்பத்திற்கு ஆபத்தா?

பட மூலாதாரம், AFP

“நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம். இப்படி ஒன்றைப் பார்ப்பது முற்றிலும் எதிர்பாராதது.” என்று அவர் கூறினார்.

ஓராண்டுக்கு முன்பு இந்த நகரத்திற்குக் குடிபெயர்ந்த பிரிட்டிஷ் ரியல் எஸ்டேட் ஆலோசகரான பேக்கர், துபையை எப்போதும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவே கருதி வந்ததாகக் கூறுகிறார்.

By admin