• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

துரை வைகோ vs மல்லை சத்யா: வருத்தம் கோரினாரா மல்லை சத்யா – நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

Byadmin

Apr 20, 2025


துரை வைகோ vs மல்லை சத்யா மோதல் முடிவுக்கு வந்ததா ?

பட மூலாதாரம், ANI

சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில் ‘கழக முதன்மை செயலாளர்’ என துரை வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ நேற்று அறிவித்திருந்த நிலையில், அவரது பதவி விலகலை மதிமுக தலைமை இன்று ஏற்க மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தீர்மான அறிக்கை இருந்தது.

‘நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள இயலாமல் கட்சிக்கும் தலைமைக்கும் தீராப் பழியை சுமத்தும் ‘ஒருவர்’ மத்தியில் பணியாற்றிட இயலாது’ என தனது ராஜினாமா அறிக்கையில் பெயரை குறிப்பிட விரும்பாமல் குற்றஞ்சாட்டியிருந்தார் துரை வைகோ.

அந்த ‘ஒருவர்’ மல்லை சத்யா என்பது இன்று வைகோ மேடையில் பேசியதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. இன்று நடந்த கூட்டத்தில் அதே மல்லை சத்யா உடன் மேடையை பகிர்ந்துகொண்டார் துரை வைகோ.

By admin