• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

துர்நாற்றம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கக்கூடும்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Apr 6, 2026


இத்தகைய துர்நாற்ற மாசுபாட்டினால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பாதிப்புகளுக்கு நாம் அதிகளவு  கவனம் செலுத்துவதில்லை.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images

படக்குறிப்பு, குப்பைகளை வெளியே கொட்டும்போதோ, குப்பை கிடங்குகளைக் கடந்து செல்லும்போதோ அல்லது ஒரு தொழிற்சாலையிலிருந்து வரும் அருவருப்பான துர்நாற்றத்தை எதிர்கொள்ளும்போதோ, அழுகும் கழிவுகளின் நாற்றத்தையோ நாம் அனைவரும் எப்போதாவது உணர்ந்திருப்போம்.

உங்கள் பக்கம் வீசும் துர்நாற்றம் உங்களை முகம் சுளிக்க வைப்பதோடு மட்டும் நின்றுவிடாது. அது உங்கள் உடல் மற்றும் மனத்தையும் பாதிக்கக்கூடும்.

எலைன் கார்னரைப் பொறுத்தவரை, ஒரு கோடை நாளில் தனது தோட்டத்துக்குள் நுழைவது என்பது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதை “திறந்து வைக்கப்பட்ட ஒரு குப்பை லாரியின் பின்னால் நடப்பதைப்” போல இருப்பதாக அவர் விவரிக்கிறார்.

பிரிட்டனின் வெஸ்ட்பரி நகரில் உள்ள தனது வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் மூடி வைத்திருந்தாலும் கூட, அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் குமட்டலை உண்டாக்கும் துர்நாற்றத்திலிருந்து தப்ப முடிவதில்லை என்று ஓய்வுபெற்ற ஆசிரியரான எலைன் கார்னர் கூறுகிறார்.

“எங்களால் எங்கள் தோட்டத்தைப் பயன்படுத்தவோ அல்லது நடைபயிற்சி செல்லவோ முடிவதில்லை, வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்கிறார் கார்னர்.

By admin