0
பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் உருவாகும் திரைப்படங்களில் நடிப்பதுடன், திரைப்படங்களை தயாரிப்பதையும் , விநியோகிப்பதையும் தொழிலாக கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ ஐ அம் கேம் ‘எனும் திரைப்படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கினும் இணைந்துள்ளார் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
‘ஆர் டி எக்ஸ் ‘எனும் படத்தை இயக்கிய இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ ஐ அகம் கேம் ‘. இதில் துல்கர் சல்மான் ,அண்டனி வர்கீஸ் , ஆகியோர் முதன்மையான நட்சத்திரங்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் தமிழ் திரையுலக இயக்குநரும் , நடிகருமான மிஷ்கின் இணைந்துள்ளார். ஜிம்சி காலித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கும் என பட குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.