துளசிமதி முருகேசன்: அவமானங்களை உடைத்து அர்ஜுனா விருது பெற்று சாதித்த தமிழக வீராங்கனை
“அமீர் கானின் தங்கல் படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி முருகேசன்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘அர்ஜுனா விருது’ துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி?
தயாரிப்பு: வி. சாரதா
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: வில்பிரெட் தாமஸ்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு