• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

துளசேந்திரபுரம்: கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற இந்த தமிழக கிராமம் வேண்டுவது ஏன்?

Byadmin

Nov 6, 2024


காணொளிக் குறிப்பு,

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டி சிறப்பு வழிபாடு செய்யும் தமிழ்நாடு கிராமம்

கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

இந்தச் சிறப்பு பூஜையின்போது, கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், சென்னையில் வாழும் அமெரிக்கர்கள் இருவரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெவோனி எவான்ஸ், இந்தத் தேர்தலில்தான் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாரதாவிடம் பேசும்போது தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. நான் வாக்களித்து விட்டேன். எங்கள் வேலை முடிந்தது. இப்போது கமலாவின் இந்த ஊருக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது” என்றார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.

‘கமலா ஃப்ரீக்கிங் ஹாரிஸ்’ (Kamala Freaking Harris) என்று எழுதிய டி-ஷர்டுகளை அவரும் அவரது நண்பர்கள் இருவரும் அணிந்திருந்தனர். கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் சார்பாக கோவிலுக்கு இந்த முறை யாரும் வரவில்லை என்றாலும், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக சிறப்பு பூஜை நடத்தியதாக துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகர் தெரிவித்தார்.

அவர், “கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ஊர் மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. நாங்கள் அனைவரும் அவரது வெற்றிக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

செய்தியாளர்: சாரதா வி

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin