• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா?

Byadmin

Apr 18, 2025


இரவில் 8 மணி நேரம் வரை தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தூங்கும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் சிலருக்கு திடீரென நள்ளிரவில் விழிப்பு வந்துவிடும்.

அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் எழுந்துவிட்டு பின்பு தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். அப்படி இரவில் திடீரென கண் விழிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடைவது, ஏதாவது சிந்தனையிலேயே தூங்க செல்வது, தேவையில்லாத எண்ணங்கள் ஆகியவை தூக்கத்தை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1. தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

2. இரவு 9 முதல் 10 மணிக்குள் தூங்க செல்ல வேண்டும்

3. தூங்குவதர்கு முன் தியானம் அல்லது ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிடும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

4. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு உணவு உண்ண வேண்டும்.

5. தூங்கும் அறை வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்தும், காற்றோட்டம் கொண்டதாக பார்த்து கொள்ள வேண்டும்

6. தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

The post தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? appeared first on Vanakkam London.

By admin