• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

தூங்கச் செல்வதற்கு முன் நொறுக்குத்தீனிகள் சாப்பிடத் தோன்றுவது ஏன்? அதைத் தவிர்ப்பது எப்படி?

Byadmin

Nov 12, 2026


நொறுக்குத் தீனி, உணவு முறை

இரவு உணவைச் சாப்பிட்டு வயிறு நிறைந்திருந்தாலும், அரை மணிநேரம் கழித்து மீண்டும் சமையலறைக்குச் சென்று ஏதாவது தின்பண்டம் இருக்கிறதா என்று தேடும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

ஆய்வுகளின்படி, சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இரவு உணவுக்குப் பிறகு தினமும் சிற்றுண்டி சாப்பிடுகின்றனர். 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில், ஐந்தில் நான்கு பேர் இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் கவலைக்குரியது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கிறிஸ்டின் பியூலியூ. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்குள் ஒருவர் அதிகமாகச் சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிப்பதற்கும் உடல் பருமன் ஏற்படுவதற்குமான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி அவர் குறிப்பிடுகிறார்.

அப்படியானால், வயிறு நிரம்பியிருந்தாலும் இரவு நேரத்தில் மீண்டும் பசி ஏற்படுவதற்குக் காரணம் என்ன? இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

 உணவு

படக்குறிப்பு,

மாலை நேரத்தில் பசி உணர்வு அதிகரிப்பது ஏன்?

இரவு முழுவதும் நீண்ட நேரம் உணவின்றி இருக்க வேண்டியிருந்தாலும், இயற்கையாகவே மாலை வேளையில்தான் நமது பசி உணர்வு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பகலில் நாம் எவ்வளவு உணவு உட்கொண்டோம் என்பது இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.



By admin