• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

தூதர்களின் குடும்பங்களை திரும்ப அழைத்த இந்தியா – வங்கதேசம் என்ன கூறுகிறது?

Byadmin

Jan 20, 2026


 தோஹித் உசேன் உடன் எஸ். ஜெய்சங்கர் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சக ஆலோசகர் தோஹித் உசேன் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (கோப்புப் படம்)

வங்கதேசத்தை ‘குடும்பம் சாரா’ தூதரகப் பணி இடமாகப் பதிவு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.

அதாவது, வங்கதேசத்தில் பணியமர்த்தப்படும் இந்திய தூதர்கள் மற்றும் அதிகாரிகள் இனி தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது என்பது தான் இதன் பொருள்.

இதுவரை, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த “குடும்பம் சாரா” பிரிவை இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தது. இந்த சமீபத்திய முடிவின் மூலம், அந்தப் பட்டியலில் வங்கதேசமும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, இந்த முடிவு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளிடம், அவர்களின் துணைவர் மற்றும் குழந்தைகள் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட அதிகாரிகளுக்கு கூடுதலாக ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

By admin