• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

தூத்துக்குடியில் ‘பிளஸ் 2 மாணவி கொலை’ – 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?

Byadmin

Mar 17, 2026


தமிழ்நாடு, தூத்துக்குடி

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தாள். பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி.

‘மாணவி கொல்லப்பட்டு ஆறு நாட்கள் கடந்த பின்னரும் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்’ எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக, நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர் கடந்த 10-ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்கச் சென்றனர்.

‘இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற தங்கள் மகள் வீடு திரும்பவில்லை’ என அங்கிருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர்.

By admin