• Sun. Sep 21st, 2025

24×7 Live News

Apdin News

தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் | Shipbuilding yards in Thoothukudi

Byadmin

Sep 21, 2025


சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் தொழில்​துறை வரலாறு காணாத வளர்​ச்சிகண்​டுள்​ளது. பல தொழில்​பிரிவு​கள், குறிப்​பாக எலெக்ட்​ரானிக்​ஸ், வாகன உதிரி​பாகங்​கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

முதல்​வரை பொறுத்​தவரை, பாரம்​பரிய துறை​கள் மற்​றும் புதிய துறை​களில் நாம் கால்​ப​திக்க வேண்​டும், வளர்ச்சி காண வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கிணங்க வெளி​நாட்டு பயணங்​கள், இங்கு நடை​பெறும் முதலீட்​டாளர்​கள் மாநாடு​களில் செமிகண்​டக்​டர் போன்ற புதிய தொழில் பிரிவு​கள் மற்​றும் கப்​பல் கட்​டும் துறை​யில் அதி​ முக்​கி​யத்​து​வம் இருப்​பதை அறிந்​துள்​ளோம். நாம் கப்​பல் கட்​டும் துறை​யில் நீண்ட கால​மாக உள்​ளோம்.

இதன் வாயி​லாக, தற்​போது தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி நிறு​வனம் மற்​றும் சிஎஸ்​எல் எனப்​படும் கொச்​சின் ஷிப்​யார்டு லிட் நிறு​வனம் இடை​யில் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான முதலீட்டு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதே​போல், மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனத்​துட​னும் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி​யில் அமை​யும் இந்த கப்​பல் கட்​டும் தளங்​களில் சிஎஸ்​எல் நிறு​வனத்​தில் 4 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 6 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 10 ஆயிரம் பேருக்​கும், மசகான் நிறு​வனத்​தில் 5 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 40 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 45 ஆயிரம் பேருக்​கு வேலை​வாய்ப்பு உரு​வாகும்.

இதுத​விர, பல்​வேறு முக்​கிய​மான சர்​வ​தேச நிறு​வனங்​களின் அதி​காரி​கள் விரை​வில் தமிழகம் வர உள்​ளனர். அப்​போது கூடு​தல் தகவல்​கள் வெளி​யாகும். இந்த இரு முதலீட்டு திட்​டங்​களும் தூத்​துக்​குடி துறை​முகத்தை ஒட்​டியே அமைய உள்​ளன. இதுத​விர, மற்ற துறை​முகங்​கள் தொடர்​பான திட்​டங்​களுக்​கும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம்.

தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற நிகழ்​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசும்​போது, கடல்​சார் போக்​கு​வரத்​து, உற்​பத்தி கொள்கை உரு​வாக்​கப்​படும் என்​றும் அறி​வித்​திருந்​தார். அந்த கொள்கை தொடர்​பாக, நாங்​கள் தற்​போது பல்​வேறு நிறு​வனங்​களு​டன் பேசி வரு​கிறோம். தமிழகத்​தில் ஒரு முதலீடுதிட்​டத்​துக்கு ஒப்​பந்​தம் போட்​டதும், தலை​மைச்​செயலர் தலை​மையி​லான கமிட்டி ஆய்வு செய்​கிறது. திட்​டத்​துக்​கான ஒப்​புதல் எளிமைப்​படுத்​தப் பட்​டுள்​ள​தால்​தான், உலகள​வில் தொழில் செய்​வ​தில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

தேசிய நலன் என்று வரும்​போது முதல்​வர் எப்​போதும் அரசி​யல் செய்ய விரும்ப மாட்​டார். மத்​திய அரசுக்கு தேவை​யான ஒத்​துழைப்பு அளிப்​போம். கப்​பல் கட்​டு​தல் என்​பது இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கி​யம். இன்​னும் பல கப்​பல் கட்​டும் நிறு​வனங்​கள் வர உள்​ளன. உலக முதலீட்​டாளர்​கள் மா​நாட்டை இந்​தாண்​டில் நடத்​து​வது குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவி்த்​தார்​.



By admin