• Fri. Jun 26th, 2026

24×7 Live News

Apdin News

தூத்துக்குடி அருகே தோன்றிய புனல் வடிவ சுழல்காற்று ஒரு சூறாவளியா? வானிலை நிபுணர்கள் விளக்கம்

Byadmin

Jun 26, 2026


எல் நினோ, சூறாவளி, தூத்துக்குடி, இயற்கை

பட மூலாதாரம், ANI

2026, ஜூன் 21 அன்று, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புனல் வடிவ சுழல்காற்று தோன்றி சில இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்திருந்தது.

இது ஒரு சூறாவளியாக இருக்கலாம் என யூகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ‘இது சூறாவளி அல்ல. இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடைய ஒரு வெப்பச்சலன சுழல் அல்லது தற்காலிக புனல் மேக அமைப்பின் விளைவு’ எனக் கூறியுள்ளது.

ஆனால், ஏற்பட்டுள்ள சேதங்களையும், வானிலை சூழல்களையும் வைத்துப் பார்க்கும்போது, தூத்துக்குடியில் உருவானது ஒரு சூறாவளி தான் என, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

எல் நினோ, சூறாவளி, தூத்துக்குடி, இயற்கை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இதில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்திருந்தது.

தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி அளவில் புனல் வடிவ சுழல்காற்று வீசியது. இதனால் வாகைக்குளம் சுங்கச்சாவடி, சில கட்டடங்கள், மரங்கள் போன்றவை சேதமடைந்தன என்றும் இதில் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

By admin