• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு: பெண் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக புகார் – என்ன நடந்தது?

Byadmin

Aug 16, 2025


சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி.
படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்த்தி.

“இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்” என வீடியோ பதிவு ஒன்றில் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, வழக்கறிஞர் ஆர்த்தி மீது ஆகஸ்ட் 14 அன்று காவல்துறை தாக்குதல் நடத்தியதாக, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில், ‘நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

By admin