• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு தமிழகத்தில்தான் அதிகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு  | Tamil Nadu has the highest number of sanitation worker deaths: Annamalai

Byadmin

Oct 6, 2025


சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்​து, சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதிவு: முதல்​வரின் சொந்​தத் தொகு​தி​யான சென்னை கொளத்​தூர் சட்​டபேர​வைத் தொகுதி திருப்​பதி நகர் முதல் பிர​தான சாலை​யில் உள்ள கழி​வுநீர் கால்​வாயை சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த தூய்​மைப் பணி ஒப்​பந்த ஊழியர் குப்​பன், விஷ​வாயு தாக்கி உயி​ரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யளிக்​கிறது. மேலும், உடனிருந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் சங்​கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்​கள்.

திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூரில் மூன்று தூய்​மைப் பணி​யாளர்​கள் உயிரைப் பறி​கொடுத்து 10 நாட்​கள் கூட ஆகவில்​லை. தற்​போது முதல்​வரின் சொந்​தத் தொகு​தி​யில் மீண்​டும் ஒரு உயிரைப் பறி​கொடுத்​திருக்​கிறோம். நாட்​டிலேயே தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு தமிழகத்​தில் தான் அதி​க​மாக இருக்​கிறது. திமுக அரசு, தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கு​வதை உறுதி செய்​ய​வில்​லை. இனி​யும் இதை விபத்து என்று சொல்​வது அர்த்​தமற்​றது.தூய்​மைப் பணி​யாளர்​களைப் கொலை செய்து கொண்​டிருக்​கிறது திமுக அரசு என்​றுதான் எடுத்​துக் கொள்ள முடி​யும்.



By admin